பதிவு செய்த நாள்
17
ஏப்
2020
04:04
சென்னை,:ரமலான் நோன்பை ஒட்டி, நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு, வரும், 19ம் தேதிக்குள் அரிசி வழங்கப்படும், என, தமிழக அரசின் தலைமை செயலர், சண்முகம் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, ரமலான் நோன்பை ஒட்டி, நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவது குறித்தும், அதை பயன்படுத்துவது குறித்தும், முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டறிந்தோம். அதன் அடிப்படையில், பள்ளிவாசல்களுக்கு, வரும், 19ம் தேதிக்குள், அரிசி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. பள்ளிவாசல்களில் இருந்து, தகுதியான குடும்பங்களுக்கு, சிறு பைகளாக பிரித்து, தன்னார்வலர்கள், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.ஒரு சிலர், கஞ்சி தயாரித்து வழங்குவதாக கூறினர்; அதில் உள்ள இடர்ப்பாடுகளை எடுத்துரைத்தோம். இதனால், நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அதை தவிர்க்கும்படி கூறினோம். அதன்பின், அரிசியாக வழங்க ஒப்புக் கொண்டனர். வரும், 19ம் தேதிக்குள், பள்ளிவாசல் களுக்கு அரிசி வழங்கப்படும். அவர்கள், 23க்குள், வீடுகளுக்கு வழங்குவர்.இவ்வாறு, அவர் கூறினார்.