பதிவு செய்த நாள்
18
ஏப்
2020
12:04
சென்னை:கிராம கோவில் பூசாரிகளுக்கான, கொரோனா நிவாரண நிதியை, வங்கி கணக்கு வாயிலாக வழங்க, அறநிலையத் துறை உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து, அறநிலையத் துறை கமிஷனர், பணீந்திர ரெட்டி கூறியுள்ளதாவது:கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தில், 33 ஆயிரத்து, 627 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஊரடங்கால், கோவில்கள் நித்திய பூஜைக்காக மட்டுமே திறக்கப்படுகின்றன. இதனால், பக்தர்களின் காணிக்கையை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் பூசாரிகள், தவித்து வருகின்றனர்.
இதையடுத்து, கிராம கோவில் பூசாரிகளுக்கு, நிவாரண நிதியாக தலா, 1,000 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. பூசாரிகளுக்கு உரிய காலத்தில் கிடைக்கும் வகையில், அந்தந்த உதவி கமிஷனர்களுக்கு, வங்கி கணக்கு வழியாக, தேவையான தொகை அனுப்பப்படுகிறது. தகுதியான பூசாரிகளின், வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சான்றுகள் பெற்று, நிவாரண தொகையை, அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அது குறித்து விபரங்களை, தினமும், கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.