பதிவு செய்த நாள்
18
ஏப்
2020
12:04
நினைவு சின்னங்கள் மற்றும் புராதான இடங்களை பாதுகாக்கும் வகையில் யுனெஸ்கோ சார்பில் உலக மரபு தினம் ஆண்து தோறும் ஏப். 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டிற்கு பெருமையும், அழகும் சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே, இவை மனித இனித்துக்கே பொதுவான வளங்கள், ஆனால் இன்றைய சூழலில் இந்த பழங்கால நினைவுச்சின்னங்கள் கவனிப்பாரற்று அழியும், அபாயத்தில் உள்ளன.
உலகின் மிக முக்கிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் பல முயற்சிகளை செய்து வருகின்றன. நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவற்கு உலக மரபு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தாஜ்மஹால், பதேஹ்பூர் சிக்ரி, குதுப்மினார், அஜந்தா மற்றும் எல்லோரா குகைள், மாமல்லபுரம் சிற்பங்கள் போன்றவை உலக பண்பாட்டு சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால் மற்ற நாடுகளில் உள்ள பண்பாட்டு சின்னங்களுட் ஒப்பிடும் போது இவற்றின் பராமரிப்பு குறைவாக உள்ளன. இவற்றில் பல இன்று அழியும் நிலையில் உள்ளன. பல நினைவுச்சின்னங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடும் சேதத்தை சந்தித்துக்கொண்டிருக்கின்றன.