கோவில் திருவிழாவிற்கு சேர்ந்த நிதியை மக்களின் செலவிற்கு கொடுத்த கிராமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2020 12:04
உசிலம்பட்டி: சேடபட்டி ஒன்றியம் தி.மீனாட்சிபுரம் கிராமத்தில் கோவில் திருவிழாவிற்கு சேர்த்த நிதியை கொரானா ஊரடங்கு காலத்தில் மக்களின் செலவுக்காக பிரித்து கொடுத்து உதவியுள்ளனர்.
தி.மீனாட்சிபரத்தில் திருவேட்டை அய்யனார், காளியம்மன், முத்தாலம்மன் கோவில் திருவிழாக்களுக்கு பொதுமக்களிடம் இருந்து வரிவசூல் செய்து பொதுநிதியாக சுமார் ஏழு லட்சம் ரூபாய் வரை சேர்த்து வைத்திருந்தனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் பொதுமக்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கோவில் திருவிழாவும் நடத்த முடியவில்லை. ஊர் பெரியவர்கள் ஆலோசனை நடத்தி கிராமத்தைச் சேர்ந்த 250 குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.3000 வீதம் பிரித்து கொடுத்துள்ளனர். பால்ராஜ்: அரசு மூலம் ரூ.1000 மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். கிராமத்தில் உள்ள அனைவரும் தினசரி வேலைக்கு சென்றால்தான் உணவு என்ற நிலையில் அவர்களுக்கு மேலும் உதவியாக இருக்கும் என்பதால் மக்களிடம் பெற்ற பணத்தை அவர்களிடம் திருப்பி கொடுத்துள்ளோம் என்றார்.