பிரம்மச்சாரியான விநாயகரைச் சுற்றினால் கல்யாண வரம் கிடைக்கிறதே...ஏன் தெரியுமா? வள்ளியை மணம் புரிய முயற்சித்த முருகனுக்கு நல்ல முடிவு கிடைக்கவில்லை. கடைசியில் அண்ணனான விநாயகரின் உதவியை நாடினார். காட்டுப்பாதையில் யானை வடிவில் தோன்றினார் விநாயகர். அவரைக் கண்டதும் வள்ளி பயத்துடன் அலறினாள். அருகில் வேடன் வடிவில் நின்றிரந்த முருகனைத் தழுவிக் கொண்டாள். இருவருக்கும் காதல் மலர, அது கல்யாணத்தில் முடிந்தது. தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைப்பவரே உலகில் அதிகம். ஆனால் பிரம்மச்சாரியான விநாயகர் தன்னை வழிபடுவோருக்கு கல்யாண வரம் கொடுத்து மகிழ்கிறார்.