அந்தாதி என்ற சொல்லை கேட்டதும் அபிராமிப்பட்டரின் ‘அபிராமி அந்தாதி’ நினைவுக்கு வரும். இதைப் போலவே சிவபெருமானுக்கும் அந்தாதி இருக்கிறது. பதினோராம் திருமுறையில் ‘சிவபெருமான் திருவந்தாதி’ இடம் பெற்றுள்ளது. இதை பாடியவர் கபிலதேவர். இது போலவே சிவன் மீது ‘அற்புத திருவந்தாதி’ என்றும் ஒரு பாடல் உண்டு. அதை பாடியவர் காரைக்கால் அம்மையார். இவரது பக்தியை கண்டு வியந்த சிவன், ‘அம்மையே’ என அன்புடன் அழைத்தார். இதனால் இவரை ‘அப்பனை பாடிய அம்மை’ என சொன்னாலும் மிகையில்லை. சிவபுராணம் போல அந்தாதி பாடல்களை படித்தால் சிவனருள் உண்டாகும்.