Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 800 ஆண்டு பழமையான நீரு பாகிலு ... மாசி மகம்; புனித நீராடி இறைவனை வழிபடுவோம்.. புண்ணியம் கிடைக்கும்..! மாசி மகம்; புனித நீராடி இறைவனை ...
முதல் பக்கம் » துளிகள்
சித்ரதுர்காவில் தரிசிக்க வேண்டிய மூன்று கோவில்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சித்ரதுர்காவில் தரிசிக்க வேண்டிய மூன்று கோவில்கள்

பதிவு செய்த நாள்

24 பிப்
2026
01:02

கர்நாடகாவின் சித்ரதுர்கா கோட்டைகள் நிறைந்த மாவட்டம். வரலாற்று ரீதியாகவும் பெயர் பெற்றது. இம்மாவட்டத்தில் பார்க்க வேண்டிய, மிக முக்கியமான மூன்று கோவில்களை பற்றி பார்க்கலாம். ஹிடிம்பேஸ்வரர் கோவில் இந்த கோவில் மஹாபாரத கதைகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இயற்கை குகை போன்ற அமைப்பில் அமைந்துள்ள சிவாலயமாகும். சிவபெருமான் ஹிடிம்பேஸ்வரர் எனும் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.


பக்தர்களுக்கு மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் கோவில் உள்ளது. இங்கு அமைதியான சூழல் நிலவுவதால் தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாகும். மலை ஆஞ்சநேயர் கோவில் சித்ரதுர்கா மலைப்பகுதியில் அமைந்துள்ள, மலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். வலிமை, துணிவு, பக்தி போன்றவற்றுக்காக, பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை முன்வைக்கின்றனர்.


ஆஞ்சநேயரின் திருவுருவம், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. இங்கு சனிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை மனதில் கொண்டு மலை ஏறிச்சென்று தரிசனம் செய்கின்றனர். சந்திரமவுலீஸ்வரர் கோவில் இக்கோவில், சித்ரதுர்கா கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. ஹொய்சாள கட்டட கலையின் வெளிப்பாடாக திகழ்கிறது. துாண்களில் உள்ள சிற்பங்கள் புராண கதைகளை பேசும் வகையில் உள்ளன. காலையிலோ, மாலையிலோ தரிசனம் செய்தால் கோவிலின் அமைதியான ஆன்மிக துளி மனதை நிம்மதியடைய செய்கிறது.  


சொந்த வாகனமே சிறந்தது 


இந்த கட்டுரையில் மூன்று கோவில்கள் குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த இடங்கள் அனைத்திற்கும் பொது போக்குவரத்தில் செல்வது கடினமான காரியம். எனவே, ஆன்மிக பயணம் செல்வோர் தங்கள் சொந்த வாகனங்களை எடுத்து செல்லலாம் அல்லது வாடகை வாகனங்களை எடுத்து செல்லலாம். இந்த பயணத்தின் போது இயற்கை சார்ந்த இடங்களையும் பார்க்க முடியும். 

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar