Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3 கிராமங்களுக்கு தாயான தட்சிணேஸ்வரி சித்ரதுர்காவில் தரிசிக்க வேண்டிய மூன்று கோவில்கள் சித்ரதுர்காவில் தரிசிக்க வேண்டிய ...
முதல் பக்கம் » துளிகள்
800 ஆண்டு பழமையான நீரு பாகிலு ஆஞ்சநேயர் கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
800 ஆண்டு பழமையான நீரு பாகிலு ஆஞ்சநேயர் கோவில்

பதிவு செய்த நாள்

24 பிப்
2026
01:02

ஹாசன் நகர் காந்தி பஜார் பகுதியில் அமைந்து உள்ளது ‘நீரு பாகிலு ஆஞ்சநேய சுவாமி கோவில். ‘நீரு பாகிலு’ என்ற பெயர், இரண்டு கன்னட வார்த்தைகளில் இருந்து வந்தது. நீரு என்றால் தண்ணீர்; பாகிலு என்றால் நுழைவு வாயில் என்று பொருள்.


பு ராணங்கள்படி, 800 ஆண்டுகளுக்கு முன், ஹொய்சாளா பேரரசின் இரண்டாம் வீர நரசிம்மரின் கீழ் தளபதியாகவும், அமைச்சராகவும் இருந்த போலால்வா என்பவரால் ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. கோவில் அருகில் உள்ள தேவிகெரே ஏரி நீர், இப்பகுதி மக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருந்தது.


இந்த ஏரி நீர், ஆஞ்சநேயர் சிலையை நோக்கி வந்து, அவரின் பாதங்களை தொட்டு செல்வதால் நம் பாவங்களை நீக்கி, செழிப்பை கொண்டு வருவதாகவும், துன்பத்தில் இருந்து பாதுகாப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். கடந்த, 200 – 250 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி பக்தர்களால் சிலையை சுற்றிலும் கோவில் கட்டப்பட்டது.


இக்கோவில் பாரம்பரிய கர்நாடக பாணியில் உருவாக்கப்பட்டு உள்ளது. எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ள இக்கோவில், ஹாசனில் முக்கிய கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கருவறையில் ஆரம்பத்தில் நிறுவப்பட்ட சிலையே இப்போதும் உள்ளது. கோவில் வளாகம் சுத்தமாகவும், அமைதியாகவும் உள்ளது. தியானம் செய்ய அமைதியான சூழ்நிலையை அளிக்கிறது.


இக்கோவிலின் முக்கிய திருவிழாவாக ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நகரின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆஞ்சநேயருக்கு மிகவும் புனிதமானதாக கருதப்படும் செவ்வாய், சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. ராமநவமியும் இங்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமைகளில், 108 முறை ஆஞ்சநேயர் மந்திரத்தை ஜெபித்தால், சனி பகவானின் பாதிப்பு நீங்கும் என்று நம்பப்படுகிறது.

நீரு பாகிலு ஆஞ்சநேய சுவாமி கோவில். ஆஞ்சநேய சுவாமி.  தேவிகெரே ஏரி.


எப்படி செல்வது?

ரயிலில் செல்வோர், ஹாசன் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு, ஆட்டோ அல்லது டாக்சியில் செல்லலாம்.

பஸ்சில் செல்வோர், ஹாசன் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு, ஆட்டோ அல்லது டாக்சியில் செல்லலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar