பதிவு செய்த நாள்
23
ஏப்
2020
11:04
மதுரை:திருஞானசம்பந்தர் அருளிய, கோளறு திருப்பதிகம் தினமும் பாடினால், கொரோனா நோயை ஒழிக்கலாம், என, மதுரை ஆதீனம் கூறினார்.
அவர் கூறியதாவது:நவக்கிரகங்கள் மூலம் ஏற்படும் துன்பங்கள் நீங்கவும், பிளேக், காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஓடவும், இந்திய - சீன போர், 1962ல் நடந்தபோதும், புயல், மழை தொடர்ந்து பெய்து, வெள்ளக் காடாக மாறியபோதும், கோளறு திருப்பதிகம் பாடி, மக்கள் நலம் பெற்று வாழ்ந்தனர். ஞானசம்பந்தரின் கோளறு திருப்பதிகத்தை, அனைவரும் மனம் உருகப் பாடி, சிவன் - பார்வதியின் அருளால், கொரோனாவை முற்றிலும் ஒழிப்போம். இந்த அபாயகரமான நேரத்தில், தியாக மனப்பான்மையுடன் பணிபுரியும் மத்திய, மாநில அரசுகள் மீது, சிலர் குற்றம் சுமத்துவதை கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.