ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரிஷ்சந்திர முர்மு தலைமையில் அமர்நாத் ஆலய வாரிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டிருப்பதாவது: தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் மே 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் எடுக்கும் முடிவு குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது யாத்திரை பயணப்படும் இடங்கள் உட்படமாநிலம் முழுவதும் கொரோனா தாக்குதல் 77 சிவப்பு மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் யாத்திரை செல்லும் இடங்களில் மருத்துவசதி மற்றும் முகாம்அமைப்பது போன்றவை சாத்தியமாகாது.
இக்காலகட்டங்களில் யாத்ரீகர்களின் பாதுகாப்பே முக்கியமானது. அதனை கருத்தி் கொண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். மேலும் பூஜைகள் ஆன் லைனில் ஒளிபரப்பப்படுவது குறித்து வாரியம் முடிவு செய்யும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.