பதிவு செய்த நாள்
08
மே
2012
10:05
புளியரை:புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் வரும் 17ம் தேதி குருபெயர்ச்சி விழா நடக்கிறது.வரும் 17ம் தேதி துவாதசியும், ரேவதி நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக தினத்தில் மாலை 5.18 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையடுத்து புளியரை சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்தி கோயிலில் சுயம்புலிங்கம் சன்னதியின் நேர் எதிரில் நந்தீஸ்வரர் இடையே பிரதானமாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி பகவானுக்கு அன்று சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடக்கிறது. 16ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், 17ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு தேவார இன்னிசை கச்சேரி, மதியம் 11 மணிக்கு பஜனை, 12.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 2 மணிக்கு ருத்ரஏகாதசி ஜெபம், ஹோமம், மாலை 5 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, புஷ்ப அலங்காரம் நடக்கிறது.17ம் தேதி குருபெயர்ச்சியை முன்னிட்டு நடை அதிகாலை 3 மணி முதல் திறந்தே வைக்கப்பட்டிருக்கும். சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஞானசேகர், கண்காணிப்பாளர் சோனாச்சலம், சங்கரகோமதிநாயகம் செய்து வருகின்றனர்.