நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஸ்சந! ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்தவ்யபாஸ்ரய:!! தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர! அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:!! பொருள் ஞான வாழ்வில் ஈடுபடுபவன் தனக்குரிய கடமையைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் எந்தவித பயனும் இல்லை. எந்த ஒரு உயிரிடமும் எவ்வித தொடர்பு அவனுக்கு இருக்காது. ஆகவே பற்று இல்லாமல் கடமையை சரிவரச் செய்து வருபவன் கடவுளை அடையும் பேறு பெறுவான்.