மதுரை மீனாட்சி கோயிலின் பட்டருக்கு கொரோனா தவறான தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2020 01:04
மதுரை: மதுரை மீனாட்சி கோயிலின் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் சாமிநாத பட்டர் கூறியதாவது:மீனாட்சி கோயில் பட்டரின் தாயாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட பட்டர் குடும்பத்தினர் பரிசோதனைக்குப் பின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் பட்டருக்கு தொற்று உறுதியானதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தவறாக செய்தி வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. அவரது வீட்டில் வேலை செய்தவர், அருகில் வசிப்பவர்கள், பட்டர்கள், கோயில் பணியாளர்கள், போலீசார் என அனைவருக்கும் பரிசோதனை நடக்க உள்ளது. ஏற்கனவே வெளிநாடு சென்று வந்த பட்டர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். 24-30 நாட்கள் அரசு கண்காணிப்பு முடிந்து, பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுஉள்ளது, என்றார்.