பதிவு செய்த நாள்
25
ஏப்
2020
03:04
கோவை:கலங்கி நிற்கும் மனிதர்களுக்கு, கடவுளே துணை. மக்கள் அனைவரும் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு, மஞ்சள் துணியில் காசு முடிந்து வைக்க வேண்டும், என, தமிழ்நாடு தர்ம ரக்சன ஸமிதி தலைவர் ஓங்காராநந்த மகாசுவாமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:நம் கிராமிய பாரம்பரியப்படி, மஞ்சள் நீரில் வெள்ளைத்துணியை நனைத்து, அதில் காசு முடிச்சுப் போட்டு, சுவாமி படம் அருகே வைத்து வழிபடுவது வழக்கம். பின்னாளில் கோவிலுக்கு செல்லும்போது, அந்த காசை நேர்த்திக்கடனாக செலுத்துகிறேன் என்று, வீடு தோறும் வேண்டிக்கொள்வது தான் நம் பாரம்பரியம்.
தற்போதுள்ள சூழ்நிலையில், நம்மையும், குடும்பத்தையும், தேசத்தையும், மக்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளோரையும், காக்க வேண்டும். கொரோனா ஒழிய வேண்டும். பொருளாதாரம் வளர்ந்து, நாடு பொலிவடைய கடவுள் அருள வேண்டும். கலங்கி நிற்கும் மனிதருக்கு கடவுளே துணை. எனவே, மக்கள் அனைவரும், கொரோனா அச்சம் விலக வேண்டி, குலதெய்வத்தை வழிபட்டு, காசு முடிந்து வைக்க வேண்டும்.இவ்வாறு, ஓங்காராநந்த மகாசுவாமி தெரிவித்துள்ளார்.