ராமகிருஷ்ணா மடம் சார்பில் பழங்குடியினர்களுக்கு உதவி பொருட்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2020 03:04
பந்தலூர்: ராமகிருஷ்ணா மடம் சார்பில் பழங்குடியின மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் வேலைவாய்ப்பு இல்லாமல் பழங்குடியின மக்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களே உணவு தேவையை வருவாய்த்துறையினர்,பல்வேறு சமூகநல அமைப்புகளும், தன்னார்வலர்களும் பூர்த்தி செய்து வருகின்றனர்.இதில் ஒரு கட்டமாக ஊட்டியில் உள்ள ராமகிருஷ்ணா மடம் சார்பில் 300க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. கோட்டை பாடி கிராமத்தில் நடந்த துவக்க நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சுரேஷ் வரவேற்றார். கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாகிகள் சுவாமி அனந்த ரூபா நந்தா, சுவாமி ஈஸ்வரி யானந்தா, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களில் நேரடியாகச் சென்று உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. அத்துடன் அனைத்து பழங்குடியின மக்களுக்கும் சேவாபாரதி சார்பில் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மனோஜ் குமார், உன்னிகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் கிரீஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.