கோவில்களில் கஞ்சி, கூழ் ஊற்றுவதற்குஅனுமதி கோரி இந்து முன்னணி மனு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2020 03:04
கள்ளக்குறிச்சி : இந்து கோவில்களில் கஞ்சி மற்றும் கூழ் ஊற்றுவதற்கு அனுமதி அளித்து அரிசி மற்றும் தானியங்கள் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட பொதுச் செயலர் ராஜா தலைமையில் செயலர் சக்திவேல், செயற்குழு உறுப்பினர் அருண், நகர செயலர் ராஜேந்திரன் ஆகியோர் அளித்துள்ள மனு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் அரசு சார்பில் கூழ் காய்ச்சுவதற்கான அரிசி மற்றும் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்கள் இலவசமாக வழங்க வேண்டும்.இந்துக்களின் பெரும் நம்பிக்கையான சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. விழாவில், கூழ் விநியோகம் செய்வதற்கான தகுந்த சமுதாய இடைவெளியை பின்பற்றக்கூடிய ஏற்பாடுகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் தன்னார்வலர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.