Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்களில் கஞ்சி, கூழ் ... வைதீஸ்வரன் கோயிலில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம் வைதீஸ்வரன் கோயிலில் செல்வ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரை திருவிழா: அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரை திருவிழா: அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து

பதிவு செய்த நாள்

25 ஏப்
2020
08:04

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 7ல் வைகையில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அழகர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,.

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.,25) கொடியேற்றத்துடன் துவங்கியது. ஊரடங்கால் மே 4ல் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சுவாமி பிரகாரம் உற்ஸவர் சன்னதியில் காலை 9:05 மணிக்கு மேல் 9:29 மணிக்குள் நடக்கிறது. இதை கோயில் இணையதளத்தில் பார்க்கலாம்.வைகையில் கள்ளழகர் மே 5ல் அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் மே 7ல் அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள வேண்டும்.

ஊரடங்கு காரணமாக இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அழகர் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கள்ளழகர் புறப்பாடு,தல்லாகுளம் எதிர்சேவை, வைகையாற்றில் எழுந்தருளல், ராமராயர் மண்டகப்படி , தண்ணீர் பீச்சுதல், வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவில் எழுந்தருளல், தேனூர் மண்டபத்தில் நடைபெறும் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல், ராமராயர் மண்டகப்படி தசவதார நிகழ்ச்சி, மைசூர் மண்கப்படி பூப்பல்லக்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு மதுரை சென்று திரும்புவதற்கு இயலாத சூழ்நிலை உள்ளது.

எனவே மண்டூக மகரிஷிக்கு சாபம் விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் பரிசாரகர்களால் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக வரும் மே மாதம் 8 ம் தேதி மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரையில் நேரடி நிகழ்ச்சியாக www.tnhrce.gov.in என்ற இணையதளம், youtube மற்றும் பேஸ்புக்க மூலமாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar