திருநள்ளார் கோவில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு முககவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2020 12:04
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் சார்பில் கிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று துணை மாவட்ட ஆட்சியர் ஆதாஷ் கூறியுள்ளார்.
காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வர பகவான் கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் உள்ளாட்சி ஊழியர்கள். போலீசார். வருவாய் துறை. தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சுய உதவி குழு மூலமாக முக கவசம் தயாரிக்கும் சுமார் 300 முகக் கவசம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் முககவசம் இல்லாமல் பலர் வெளியில் செல்வதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் துறை ஊழியர்கள் முலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் அபராதம் விதித்தப்பின் அவர்களுக்கு முக கவசம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கிராமப் பகுதிகளில் பொதுமக்களில் வீடுகளுக்கு சென்று கோவில் நிர்வாகம் சார்பில் முககவசம் வழங்குவதற்கான நடவடிக்கை கோவில் நிர்வாகம் எடுக்கப்பட்டு வருவதாக கோவில் நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.