ரெகுநாதபுரம்; உச்சிப்புளி அருகே அரியமான் மீனாட்சியம்பிகை சமேத சோம சுந்தரேஸ்வரர் கோயிலில் அட்சய திரிதியை முன்னிட்டு கோ பூஜை நடந்தது. மூலவர்களுக்கு பால், பன்னீர், இளநீர், திரவியப்பொடிகளால் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டு, அன்னம் ஊட்டப்பட்டது.உலக நன்மைக்கானசிறப்பு பூஜைகள் நடந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மீள வேண்டியும், நீர்வளம் செழித்து இன்புற்றிருக்க சிவபுராணம் பாடப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.பக்தர்கள் யாரும் பூஜையில் பங்கேற்கவில்லை.