துாய்மை பணியாளர்களுக்கு சேவா பாரதி சார்பில் பாத பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2020 02:04
திருப்பூர்: திருப்பூரில், துாய்மை பணியாளர்களுக்கு சேவா பாரதி அமைப்பினர் பாத பூஜை செய்தனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் துாய்மை பணியாளர்கள் சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இப்பகுதியில் துாய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளிப்பு, பிளீச்சிங், சுண்ணாம்பு பவுடர் போடுதல், சாக்காடை கால்வாய் சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர் மூன்றாவது மண்டலத்துக்கு உட்பட்ட துாய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சேவா பாரதி அமைப்பின் தன்னார்வலர்கள், ஐந்து துாய்மை பணியாளர்களின் பாதங்களுக்கு தண்ணீர் ஊற்றி, மலர் துாவி மரியாதை செலுத்தினர். அவர்களுக்கு முக கவசம் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கி, பாராட்டினர்.