பிறருக்கு தீ்ங்கு ஏற்படுத்த சிலர் மந்திரம் சொல்கிறார்களே...சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2020 05:04
எண்ணம், சொல், செயலால் நமக்கும், பிறருக்கும் நன்மை ஏற்படவே வழிபாடு செய்ய வேண்டும். திருமணம், ஆரோக்கியம், வேலைவாய்ப்பு என ஆயிரம் தேவைகள் இருக்கும் போது, எதிர்மறை நோக்கத்துடன் வழிபடுவது நல்லதல்ல. ‘ஆற்றில் குளிக்கிறேன்’ எனச் சொல்லி விட்டு, சேற்றில் விழுந்த கதை போன்றது இது. இப்படிப்பட்டவர்கள் முதலில் நல்ல புத்திக்காக கடவுளைச் சரணடைவது அவசியம்.