மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2025 11:08
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.நேற்று ஆடித்தபசை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் தவக்கோலத்தில் கோயில் முன் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து சோமநாதர் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் மண்டகப்படி முன் விருஷபரூடராக காட்சியளித்த பின்னர் அம்மன் சுவாமியை 3 முறை சுற்றி வந்த பிறகு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.