பல்லவ மன்னர் ஒருவர் கட்டிய புதிய சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தாகி விட்டது. இந்நிலையில் மன்னரின் கனவில் தோன்றி, ‘வாயிலார் நாயனார்’ என்னும் அடியவர் தன் மனதில் கட்டிய கோயிலுக்கு அதே நாளில் செல்ல வேண்டியுள்ளது’ என்று தெரிவித்தார் சிவபெருமான். மானசீகமாக வழிபட்டாலும் பலன் கிடைக்கும் என்பதை காட்டும் சம்பவம் இது. நம்பிக்கையுடன் மனதிற்குள் வேண்டினாலும் தோஷம் நீங்கி நல்லதே நடக்கும்.