அருணகிரிபட்டினம் முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2025 11:08
தேவகோட்டை; தேவகோட்டை அருணகிரிபட்டினம் முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. வெவ்வேறு அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் மாலையில் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து கோயிலில் பூஜைகள் நடந்தன.அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் பூக்கள் எடுத்து வந்து பூச்சொரிதல் செய்து வழிபட்டனர். நேற்று பக்தர்கள் பால்குடம், வேல் காவடி, பறவை காவடிகள் எடுத்து வந்து தீமிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.