பாஷ்யம் நகர் முருகன் கோவில் அருகில் நாளை 1,008 திருவிளக்கு பூஜை
பதிவு செய்த நாள்
07
ஆக 2025 11:08
ஸ்ரீராமபுரம்: பாஷ்யம் நகர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் எதிரில், வரும் 8ம் தேதி 1,008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. சகலவிதமான செல்வத்தை அளிக்கும் வரலட்சுமி விரதம், ஆடி பவுர்ணமி இணைந்து ஆடி மாதம் நான்காவது வெள்ளி கிழமையான, ஆகஸ்ட் 8ம் தேதி அன்று மாலை 4:00 மணிக்கு, தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்ரீராமபுரம் சுதா புக் சென்டர் இணைந்து ஸ்ரீராமபுரம் பாஷ்யம் நகரில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் எதிரில் திருவிளக்கு பூஜை நடத்துகிறது. தோஷங்கள் நீங்கிட, திருமண தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் கூடி வரவும், மங்கல பாக்யம் கைகூடி மழலை பேறு பெற்றிடவும்; மஹாலட்சுமி கடாட்சம் பெற்று மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திடவும்; வீட்டிலும் நாட்டிலும் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறைந்திட, அம்பிகையை வழிபாடு செய்தால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். இப்பூஜையில் பங்கேற்க விரும்புவோர், பாஷ்யம் நகர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று காலை 9:00 மணிக்கு மேல் தங்கள் பெயரை பதிவு செய்து, அதற்கான டோக்கன் பெற்று கொள்ளலாம். பூஜையில் பங்கேற்க விரும்புவோர், 63691 50416 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பூஜைக்கு தேவையான மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம், திரி, எண்ணெய், கற்பூரம், ஊதுவத்தி, திருமாங்கல்ய கயிறு, நெய்வேத்தியம் வழங்கப்படும். பூஜையில் பங்கேற்க விரும்புவோர் குத்துவிளக்கு, தாம்பாளத்தட்டு, பஞ்சபாத்திரம், மணி ஆகியவை மட்டும் எடுத்து வர வேண்டும். பூஜையில் பங்கேற்க எந்தவித கட்டணமும் கிடையாது. ஹிந்து சமயத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமான இடத்தை பிடித்து உள்ளது. அனைத்து இடங்களிலும் இருக்கும் இறைவனை, நம் இல்லத்தில் எழுந்தருள செய்வதே விளக்கு வழிபாடாகும். ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் வளர்த்து, இறைவனை வழிபட்டனர். இந்த முறையே தற்போது தீப வழிபாடாக மாறியிருக்கிறது. திருவிளக்கு பூஜையின் முக்கிய நன்மைகள், தீமைகள் அகன்று நன்மைகள் சேர்வது, மனதில் உள்ள இருள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் உருவாவது, கவலைகள் நீங்கி மனம் தெளிவடைவது, வாழ்வில் மங்கல காரியங்கள் நிகழ்வது போன்றவை அடங்கும்.
|