பதிவு செய்த நாள்
28
ஏப்
2020
10:04
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியான வரும் மே, 6ல், திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருவண்ணாமலையில், மார்ச், 24 முதல், அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு, ஏப்., மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வரும் மே, 6 மற்றும், 7ல், சித்ரா பவுர்ணமி வரும் நிலையில், மே, 3க்கு பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் செல்ல வருவர். இதனால், சமூக தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், கிரிவலம் செல்ல தடை விதிப்பது என, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இது குறித்து, மாவட்ட நிர்வாகம், அரசுக்கு கடிதம் அனுப்பி, அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது. இதனால், சித்ரா பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.