பதிவு செய்த நாள்
29
ஏப்
2020
06:04
இளைஞன் ஒருவன் பொறுப்பின்றி ஊர் சுற்றி வந்தான். வருபவர்கள், போகிறவர்கள் என அனைவரையும் வம்பு இழுப்பான். . சண்டைச் சச்சரவில் சிக்கி ஊரார் பழிக்கும்படி தன் மகன் இருக்கிறானே என அவனது தாய் பாத்திமாவுக்கு கவலை.
ஆனால், அவனுக்கு தாயின் மீது பிடிப்பு இருந்தது. அவளது சொல்லுக்கு கட்டுப்படுவான்.
ஒருநாள் சாப்பிட அமர்ந்தவன், ‘‘நல்ல பண்புகள்.... அப்படின்னு சொல்றாங்களே, அப்படின்னா என்ன?’’ எனக் கேட்டான்.
‘இது கூட தெரியாமல் இருக்கிறானே...இவனை பொறுப்பில்லாமல் இப்படி வளர்த்துட்டோமே’ என மனதிற்குள் வருந்தினாள்.
‘‘நாயகம் சொல்லியுள்ள நல்ல பண்புகள் என்னென்னு வரிசையாக சொல்கிறேன். அதன்படி நடந்தால் ஊர் போற்றும் நல்லவனாக வாழலாம்’’ என்றாள்.
அதை கேட்ட மகனும் தலையசைத்தான்.
‘‘ நல்ல செயல்களில் ஈடுபடுவது, தானம், தர்மம் செய்வது, நோயாளிகளை நலம் விசாரிப்பது, நல்லவரா கெட்டவரா என யோசிக்காமல் ஒருவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பது, அண்டை, அயலாருடன் அன்புடன் நடப்பது, முதியவர்களை மதிப்பது, மற்றவர் குறைகளை மன்னிப்பது, சண்டை சச்சரவை தீர்த்து வைப்பது, கோபத்தை அடக்குவது, உறவினர்களை நேசிப்பது, கர்வமின்றி எளிமையுடன் வாழ்வது போன்றவை.’’ என்றாள்.
இதை கேட்ட மகன் கடந்த காலத்தில் தான் செய்த தவறுகளை எண்ணி கண் கலங்கினான்.
இந்த பண்புகளை நாமும் ஏற்றால் ஊரும், உலகமும் நம்மை வாழ்த்தும்.