விலங்குகளில் யானை அதிக ஞாபக சக்தி கொண்டது. பிறர் செய்த தீமையை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவை மறப்பதில்லை. ஒருமுறை சிறுவன் ஒருவன் உண்பதற்காக யானைக்கு தேங்காய் கொடுத்தான். ஆசையுடன் வாங்கி, அதை உடைத்த போது அதனுள் சுண்ணாம்பு இருப்பதை யானை அறிந்தது. துதிக்கையில் சுண்ணாம்பு பட்டதால் வெந்து புண் ஏற்பட்டது. யானை தான் பட்ட வேதனையை மறக்கவில்லை. சில ஆண்டுகள் கழிந்தன. ஒருநாள் காட்டுப்பகுதியில் கூட்டமாக சென்ற போது, வாலிபனாக சென்று கொண்டிருந்த சிறுவனை அடையாளம் கண்டது யானை. தனக்கு இழைத்த கொடுமையை மறக்காமல் அவனைத் துரத்தியது. இப்படி பாவச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அதற்குரிய தண்டனை பெறுவது உறுதி. இப்படிப்பட்டவர்கள் தங்களின் தீய குணங்களை விடுத்து ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டால் நிம்மதியுடன் வாழலாம்.