Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்த்தி விழா; உப்பூர் ... திருமலை பூவராஹஸ்வாமி கோயிலில் வராஹஸ்வாமி ஜெயந்தி விழா திருமலை பூவராஹஸ்வாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா; இன்று மாலை தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா; இன்று மாலை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

26 ஆக
2025
10:08

திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை தேரோட்டமும், மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தலும் நடைபெறும். நாளை காலை திருக்குளத்தில் சதுர்த்தி தீா்த்தவாரி உற்ஸவமும் நடைபெறும்.


நகரத்தார் கோயிலான இங்கு சதுர்த்திப் பெருவிழா பத்துநாட்கள் நடைபெறும். ஆக.18 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் வாகனத்தில் கற்பகவிநாயகர் திருவீதி உலா நடைபெறுகிறது. இரண்டாம் நாள் துவங்கி நேற்று வரை காலையில் வெள்ளிக் கேடகத்தில் விநாயகர் வலம் வந்தார். ஒன்பதாம் திருநாளான இன்று காலை 9:00 மணிக்கு விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர்களில் எழுந்தருளுவர். இந்த ஆண்டு முதல் புதிதாக செய்யப்பட்டுள்ள தேரில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளுகிறார். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபாடு துவங்கும். மாலை 4:00 மணிக்கு மேல் தேரோட்டம் துவங்கும். தொடர்ந்து மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். பக்தர்கள் மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவரை சந்தனக்காப்பில் தரிசிக்கலாம். மறுநாள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 10:00 மணி அளவில் கோயில் திருக்குளத்தில் தெற்கு படித்துறையில் அங்குசத்தேவருக்கு சிவாச்சார்யர்களால் தீர்த்தவாரி நடைபெறும். உச்சிக்கால பூஜையில் மதியம் 1:00 மணிக்கு மேல் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும்.  இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar