கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் லட்சுமிநாராயண வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ள திவ்யதேசமான திருவந்திபுரத்தின் அபிமான தலமாக இது திகழ்கிறது. திருமணத்தடை விலக இங்குள்ள பெருந்தேவித்தாயாருக்கு 8 வெள்ளிக் கிழமை அல்லது 4 பஞ்சமி திதி நாட்களில் தொடர்ந்து அர்ச்சனை செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். பொங்கலுக்கு முதல்நாள் (போகிப்பண்டிகை) இக்கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கும். அன்று ஆண்டாள் சூடிய மாலையை பக்தர்கள் வீட்டுக்கு வாங்கிச் செல்வர். இதனால் விரைவில் மணவாழ்வு கைகூடும் என்பது நம்பிக்கை.