திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் எமசம்கார விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2020 11:05
நாகை : திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இல்லாமல் சமுதாய இடைவெளியுடன் கோவிலின் உள்ளே புகழ்வாய்ந்த எமசம்கார விழா தருமை ஆதீனம் முன்னிலையில் ஆகம முறைப்படி நடைபெற்றது.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் அபிராமி அம்பாள் உடனாய அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலத்தில் எமதர்மர், மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்தபோது, மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தார். மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க எமன் வீசிய பாசக்கயிறு, சிவபெருமான் மீது பட, அ வர் காலசம்ஹாரமூர்த்தி உருவெடுத்து எமனை சம்ஹாரம் செய்ததாக ஐதீகம். இதனை போற்றும் வகையில் யமசம்கார நிகழ்ச்சி ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் நடை பெறும். அதன்படி கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்கள் இன்றி நேற்று நடைபெற்ற யமசம்ஹார நிகழ்ச்சியில் காலசம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் மண்டபத் திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார். பின்னர், எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, எமனை சிவபெருமான் சம்ஹாரம் செய்யு ம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி ஆகம முறைப்படி கோயிலின் உள்ளே தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசி லாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கோவில் சிப்பந்திகள் மட்டும் சமூக இடைவெளி விட்டு பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.