காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கொரோனா ஊரடங்கு உத்தரவால் நேற்று பகவானுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை இணையத்தளம் மூலமாக ஒளிபரப்பப்பட்டது.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசனம் செய்வதற்காக திருநள்ளாறு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவால் கோவில் நடைகள் அடைக்கப்பட்டுள்ளது.இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் நலன் கருதி மற்றும் உலக இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து விரைவில் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப அனுக்கிரக மூர்த்தியாக உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு நேற்று சனிக்கிழமை என்பதால் காலை மற்றும் மாலை ஆகிய வேளைகளில் அபிஷேகம் மற்றும் ஆராதனை கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெறும்.மேலும் அபிஷேகம் மற்றும் ஆராதனை ஆகியவை தேவஸ்தான வலைப்பக்கத்தில் (www.thirunallarutemple.org) இணைக்கப்பட்டுள்ள YOU TUBU சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் வீடுகளிலில் குடும்பத்துடன் கண்டு களித்தனர்.