கட்டிக்குளம்: மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் ராமலிங்க சாமி கோயில் முன் புதிதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெப்பக்குளம் அமைக்கும் பணி பூமி பூஜையோடு துவங்கியது.
கட்டிக்குளத்தில் மிக பழமை வாய்ந்த சூட்டுக்கோல் ராமலிங்க சாமி கோயிலுக்கு பின்புறம் இருந்த தெப்பக்குளம் சேதமடைந்து அங்கு தண்ணீர் தேங்காததால் ஊரில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததை அடுத்து சேதமடைந்த தெப்பக்குளத்திற்கு பதிலாக கோயில் முன் புதிய தெப்பக்குளம் கட்டி தர வேண்டும் என்று கட்டிக்குளம் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனிடம் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொது நிதியிலிருந்து 37 சென்ட் நிலத்தில் புதிய தெப்பக்குளம் கட்ட உத்தரவிட்டார்.நேற்று கோயில் முன் தெப்பக்குளம் அமைய உள்ள இடத்தில் கிராம நிர்வாகிகள் கோயில் டிரஸ்ட் நோபிள்ராம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தமிழ்நேசன், மாணிக்கவாசகம், கிராம நிர்வாகி ராமகிருஷ்ணன், தெப்பக்குளம் மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.