மகிழ்ச்சியை வெளிப்படுத்த தமிழர் கண்ட பண்பாட்டின் அடையாளங்கள் விழாக்கள். குறிப்பிட்ட வயதுகளில் நடத்தும் விழாக்களுக்கும் தனித்தனி பெயர்கள் உண்டு. ஐம்பது – பொன், அறுபது – மணி, எழுபது – பவளம், எழுபத்தைந்து – வைரம், எண்பது – முத்து எனக் கொண்டாடுவது நம் மரபு.