முன்பின் அறியாத ஒரு ஆணும், பெண்ணும் கணவன், மனைவியாக வாழ்க்கையில் இணைகிறார்கள். மனம் ஒத்து வாழ்க்கை நடத்துவது, பிள்ளைப்பேறு, அவர்களின் எதிர்காலம் இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ள வசதியாக இருப்பது ஜாதகம். இருவரின் ஜாதகமும் ஒரே மாதிரியாக இருந்து பொருந்தியிருந்தால் பெற்றோர்களும் கவலையில்லாமல் திருமணத்தை நடத்தி வைப்பார்கள். புதுமணத் தம்பதிகளும் மகிழ்ச்சியாக வாழ்வர். இதுவல்லாமல் தாங்களே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பவர்களும், பெற்றோர்கள் அனுமதியுடன் மனப்பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்து கெ õள்பவர்களும் உண்டு. இவை ஒரு காரணத்தினால் நிகழ்ந்து விடுகிற காரியம். ""தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு செய்கிறோம் என்று பெற்றோர்கள் ஒரு வித பயத்துடனேயே சொல்லிக் கொண்டிருப்பர். நிம்மதியாக திருமணம் நிகழ பெரியவர்கள் கூறுகிறபடி ஜாதகம் பார்த்து செய்வதே சிறந்தது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சுவாமியுடன் பூ உத்தரவு கேட்டு செய்யலாம். தாங்கள் கேட்பது மூன்றாவது நிலை, தெய்வம் காப்பாற்றட்டும். இவ்வளவு சிரத்தையாகக் கேட்டிருப்பதைப் பார்த்தால் வேறு ஏதோ ஏற்பாடு நடப்பது போல தெரிகிறது. பெற்றோர்களிடம் கூறிவிடுங்களேன்.