ஸ்ரீவில்லிபுத்துார், கள்ளழகருக்கு அண்விப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிகள்ளழகருக்கு க்கொடுத்த மாலை, கிளி, பட்டு மற்றும் மங்கல பொருட்கள் மதுரை கொண்டு செல்லப்பட்டன.
இதை முன்னிட்டு, நேற்று மாலை 4.30 மணிக்கு, வெள்ளிகிழமைகுறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகளை தேவ ராஜ் பட்டர் செய்தார். வேதபிரான் சுதர்சன் வேதவிண்ணப்பம் செய்தார். ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் பிரசன்னவெங்கடேஷ் தலைமையில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, பட்டு, கிளி மற்றும் மங்கல பொருட்கள் கூடையில் வைத்து மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு எடுத்து செல்லபட்டது. ஊரடங்கால் விழா ரத்தான நிலையிலும் ஆகமவிதிப்படி கள்ளழகருக்கு பூஜை நடப்பதால்ஸ்ரீவி.,யில் இருந்து மாலை கொண்டு செல்லப்பட்டது. செயல்அலுவலர் இளங்கோவன், ஸ்தானிகம் கிருஷ்ணன், மணியம் கோபி பங்கேற்றனர். பக்தர்களுக்கு அனுமதியில்லை.