பதிவு செய்த நாள்
08
மே
2020
03:05
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன
பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தை, கடந்த மாதம், 29ல் துவக்கி,
வரும், 9 வரை நடத்த, கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. கொரோனா வைரஸ்
தடுப்பு, தேசிய ஊரடங்கால், உற்சவம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில்,
கோவில் பிரம்மோற்சவ சேவை கருதி, கோவில் பட்டாச்சாரியார் ஒருவரின்
குடும்பத்தினர், இதே நாட்களில், வீட்டிலேயே, குடும்ப வழிபாட்டு சுவாமி
சிலைக்கு, தினம் அபிஷேகம், அலங்காரம் செய்து, உற்சவ
சேவையாற்றுகின்றனர்.ஐந்தாள் உற்சவமாக, கருட சேவையாற்றினர். ஏழாம் நாள்
உற்சவமாக, நேற்று முன்தினம் உற்சவம் நடத்தி, சுவாமியை, சிறிய அலங்கார
ரதத்தில், ஆவாஹணம் செய்தனர். சிறுவர்கள், ரதம் இழுத்து, திருத்தேர் உற்சவம்
நடத்தினர்.