பதிவு செய்த நாள்
08
மே
2020
04:05
திருப்பூர்: சித்திரை மாத பவுர்ணமி நாளான நேற்று, சின்னாண்டிபாளையம் சித்ரகுப்தர் கோவிலில் நேற்று, சிறப்பு பூஜைகள் நடந்தன.திருப்பூர் மாநகராட்சியின், 59வது வார்டுக்கு உட்பட்டது சின்னாண்டிபாளையம்.
அங்குள்ள, விநாயகர் கோவிலில், சித்ரகுப்தர் சன்னதி உள்ளது. ஆண்டு தோறும், சித்ரா பவுர்ணமி விழா, விமரிசையாக கொண்டாடப்படும்.ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், நேற்று சித்ரா பவுர்ணமி பூஜைகள் எளிமையாக நடந்தது.அதிகாலை, 4:00 மணிக்கு கணபதி ேஹாமும், தொடர்ந்து, 16 வகையான திரவியங்களால், அபிேஷகமும் நடைபெற்றது.தொடர்ந்து மஞ்சள் காப்பு அலங்காரத்தில், சித்ரகுப்தர் அருள்பாலித்தார். கொரோனாவை விரட்டி, மக்களை காக்க வேண்டுமென, ஊர் பொதுமக்கள் சார்பில், பொது பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.