மதுரை மீனாட்சி அம்மன் பொற்றாமரைக் குளத்தில் பராமரிப்புப் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2020 01:05
மதுரை : மதுரை மீனாட்சி கோவில் பழமைவாய்ந்த கோவில். இங்கு அமைந்துள்ள பொற்றாமரை குளம், சரித்திரப் புகழ் வாய்ந்தது. இந்திய தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்களின் ஆலோசனைப்படி, களிமண் படுகையினால் பொற்றாமரை குளத்தின் அடிப்பரப்பு அமைக்கப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை வேளாண் கல்லூரி விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்பட்ட தொழில் நுட்ப ஆலோசனைப்படி பொற்றாமரைக் குளத்தை தூய்மைப்படுத்தி, பாசி வளராமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தை மேம்படுத்தும் வகையில், படிக்கட்டு பகுதிகளில் தற்போது உள்ள இரும்பு வேலிகளை அகற்றிவிட்டு, தண்ணீர் மேற்பரப்பின் அலங்கார வேலைப்பாடுகளுடன் கல் தூண்களுடன் கூடிய பித்தளை தடுப்பு அரண் அமைக்கப்பட உள்ளன. ரூ.70 லட்சம் மதிப்பிலான சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.