தஞ்சாவூர், திருவையாறு ஐய்யாரப்பர் கோவிலில், மக்களை அச்சுறுத்தும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட ருத்ரஜெப ஹோமம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான, அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஐய்யாரப்பர் கோவில் உள்ளது. இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக சித்தரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் சித்திரை மாத கடைசி நாளான இன்று(13ம் தேதி), தருமபுர ஆதீனம் 27–வது குருமா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாசாரிய சுவாமிகள், சாமி தரிசனம் செய்து, உலகளில் உள்ள அனைவரும் கொரோனா நோயிலிருந்து மக்களை காப்பாற்றவும், பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாவில் இருந்து விடுபடவும், நடைபெற்ற ஏகாதச மகா ருத்ர ஜெப ஹோ புராணத்தில் கலந்துகொண்டார். தொடர்ந்து, திருவையாறு பேரூராட்சியில் பணிபுரியும் 65 துாய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.