திருவெம்பாவையில் ‘பத்துடையீர் ஈசன் பழஅடியீர்’ என்று சிவனடியார்களுக்குரிய பத்து குணம் பற்றிய குறிப்பு உள்ளது. அவை திருநீறு பூசுதல், ருத்ராட்சம் அணிதல், ஐந்தெழுத்து மந்திரம் ஓதுதல், சிவனுக்குரிய பாடல்கள் பாடுதல், சிவனை பூஜித்தல், தானதர்மம் செய்தல், சிவன் பெருமை கேட்டல், சிவாலயத்தை பராமரித்தல், சிவபக்தர்களோடு சேர்ந்திருத்தல், அந்த பக்தர்களுக்கு சேவை செய்தல் ஆகிய பத்தாகும். இதில் திருநீறு பூசுவதும், ருத்திராட்சம் அணிவதும் முக்கியமானவை. மணமான பெண்ணுக்கு அணிகலனாகத் திகழும் மாங்கல்யம் போல சிவபக்தர்களுக்கு ருத்ராட்சம் முக்கியம்