மேய்ச்சலுக்கு சென்ற பசுக்கள், மாலை நேரத்தில் கொட்டிலுக்குத் திரும்பும். ஆனால் தாமதமாகும் போது, மேய்ச்சலின் போதே தாய்ப்பசுவுக்கு கன்று நினைவுக்கு வந்து விடும். அன்பின் மிகுதியால் அதன் மடியில் பால் தானாகச் சுரக்கும். அது போல ஆழ்வார்கள் திருமாலின் கருணையை நினைத்ததும் பாடத் தொடங்கி விடுவர். அவர்களின் பாடல்களை ‘பா சுரம்’ என்பர். ஏனெனில் பால் சுரப்பது போல பக்தியால் சுரந்த பாடல்கள் (பா) இவை. இவற்றைப் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர். ‘திருமாலே பரம்பொருள் என பக்தியில் ஆழ்ந்தவர்கள்’ இவர்கள்.