அதிகாலை, மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் லட்சுமி கடாட்சம் பெருகும். அப்போது பால், வாழைப்பழம், தேனைக் கலந்து சுவாமிக்கு பிரசாதமாக படைப்பது சிறப்பு. இதற்கு ‘திரிமதுரம்’ என்று பெயர். இதை முதலில் குழந்தைகளுக்கு கொடுத்த பின்னரே, பெரியவர்கள் சாப்பிட வேண்டும்.