பதிவு செய்த நாள்
21
மே
2020
11:05
குளித்தலை: பக்தர்கள் தரிசனத்திற்கு கோவில்களை திறந்திடவும், அன்னதானம் திட்டம் தொடர்ந்து நடைபெறவும், தமிழக முதல்வருக்கு அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்துள்ளனர். இதனால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். எனவே, கோவில்களை கட்டுப்பாடுகளுடனும், அனைத்து வித பாதுகாப்புகளுடனும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக திறக்கப்பட வேண்டும். தினமும், 300 முதல், 500 பேர் சுவாமி தரிசனம் செய்ய, முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கோவில்களில் அன்னதானம் திட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற வேண்டும். கோவிலில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், அர்ச்சகர்கள், பக்தர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, முதல்வருக்கு அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.