பதிவு செய்த நாள்
23
மே
2020
11:05
புதுடில்லி: ரமலான் தினத்தன்று வீட்டிலேயே தொழுகை நடத்தும் படி, ஜூம்மா மசூதியின் துணை ஷாஹி இமாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டில்லி, ஜும்மா மசூதியின் துணை ஷாஹி இமாம், சபான் புகாரி கூறியதாவது:கொரோனா பரவலைத் தடுக்க, அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவுப்படி, முஸ்லிம்கள் அனைவரும், சமூக இடைவெளியை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். ரமலான் தினத்தன்று, பொது இடங்களில் கூடி தொழுகை நடத்த வேண்டாம். அவரவர், தத்தமது இல்லங்களில், தொழுகை செய்யுங்கள். மசூதிக்கு வெளியே திறந்த வெளியிலோ அல்லது பூங்காவிலோ தொழுகை செய்ய அனுமதிக்க முடியாது. ஜமாத்-உல்-விதா, நமாஸ்-இ-ஈத் தொழுகையை உங்கள் வீடுகளிலேயே செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவிகளை செய்யுங்கள் என, அனைத்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.