பதிவு செய்த நாள்
23
மே
2020
11:05
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பூர் நகரின் மத்தியில் உள்ள, கம்பீர அழகு வாய்ந்த, ஸ்ரீவிஸ்வேஸ்வரசுவாமி, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றது. வைகாசி விசாகத் தேர்த்திருவிழா இரு நாட்கள் நடக்கும்.கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், நடக்குமா என்ற குழப்பம் நிலவியது. இந்நிலையில், 28 ம் தேதி தேர்த்திருவிழா துவங்குமென, அர்ச்சகர் தரப்பு கூறியதாக தகவல் வெளியானது; இதை, கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது.செயல் அலுவலர் சீனிவாசன் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவுப்படியும், கொரோனா ஊரடங்காலும், கோவில்களில் நிகழ்ச்சிகள் நடப்பதில்லை; பக்தர்கள் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வைகாசி தேர்த்திருவிழா, ஊரடங்கு முடிந்திருந்தால், 28 ல் துவங்கியிருக்கும். ஊரடங்கு, 30ம் தேதி வரை இருப்பதால், தேர்த்திருவிழா, மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுகிறது, என்றார்.