பதிவு செய்த நாள்
23
மே
2020
12:05
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த புத்தேரி ேஷத்திரம், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மன் சுவாமிக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள மகா மாரியம்மன் சுவாமிக்கு, நேற்று காலை 10:30 மணியளவில் பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம்; 11:00 மணியளவில் உலக மக்கள் நலன்வேண்டி சிறப்பு பூஜை, 11:15 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பூஜையின்போது, பக்தர்கள் இன்றி, அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர். சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் குழு தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.