பதிவு செய்த நாள்
25
மே
2020
12:05
திருப்பதி : திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட், ஜூன், 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. திருமலையிலும் ஏழுமலையான் தரிசனம், மே, 31 வரை ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, மே 31 வரை, பக்தர்கள் முன்பதிவு செய்த ஆர்ஜித சேவைகள், விரைவு தரிசனம், வாடகை அறை உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்தை, அவர்களின் வங்கி கணக்குகளில் தேவஸ்தானம் திருப்பி செலுத்தியது.தற்போது, ஜூன், 1 முதல், 30 வரை, பக்தர்கள் முன்பதிவு செய்த சேவா டிக்கெட், வாடகை அறை, விரைவு தரிசனம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து, பணத்தை பக்தர்களுக்கு திருப்பி அளிக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஸ்ரீவாணி அறக்கட்டளை வாயிலாக, ஆன்லைனில், வி.ஐ.பி., பிரேக் தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்களுக்கு மட்டும் ரத்து செய்து கொள்ளும் வாய்ப்பில்லை. அவர்களுக்கு மட்டும், பக்தர்கள் தரிசனம் துவங்கும் போது, அவர்கள் விரும்பும் தேதியில், ஏழுமலையான் பிரேக் தரிசனம் அளிக்கப்படும் என, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.