பதிவு செய்த நாள்
25
மே
2020
03:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், இரவில் பக்தர்கள் கிரிவலம் செல்வதால், போலீசார் தடுப்புகள் அமைத்து கிரிவலப்பாதையை மூடியுள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் மலையை, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமியில் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்வர். தற்போது, கொரோனா ஊரடங்கால், கடந்த மூன்று மாதமாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது, ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு, ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும், அருணாசலேஸ்வரர் கோவிலின் உள்ளே செல்லவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் இரவில் கிரிவலம் செல்ல தொடங்கி உள்ளனர். இதை தடுக்கும் விதமாக போலீசார், பகலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தடுத்தும், இரவில் கிரிவலப்பாதையை முழுவதும் பேரிகாடால் தடுப்பு அமைத்து, வழியை மூடியும், பக்தர்கள் செல்லாமல் தடுத்து வருகின்றனர்.