காரைக்கால் பத்ரகாளியம்மன் மகிஷ சம்ஹார பெருவிழா ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2020 03:05
காரைக்கால்: காரைக்கால் பத்ரகாளியம்மன் கோவிலில் முக்கிய திருவிழாவான மகிஷ சம்ஹார திருவிழா கொரோனா ஊரடங்கு உத்தரவால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.மேலும் வெள்ளி. செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் பத்திரகாளி அம்மனை தரிசனம் மேற்கொள்ள பக்தர்கள் அதிகம் அளவு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைத்து கோவிலில் நடை அடைக்கப்பட்டு உள்ளது.இதனால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை மேலும் கோவிலில் உள்ள முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை மாதம் வருடாந்திர மகிஷ சம்ஹார திருவிழா ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடைபெறும்.இவ்வாண்டு கடந்த மே 6ம் தேதி தொடங்கி தீமிதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகிஷ சம்ஹார திருவிழா இன்று 26ம் தேதி மிகச்சிறப்பாக நடைபெறும். ஆனால் ஊரடங்கு உத்தரவால் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷ சம்ஹார பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.